நடிகைகளின் உல்லாச கவனிப்பால் வீழ்ந்தார்களா பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்?

Last Modified ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (11:26 IST)
குஜராத்தை சேர்ந்த வைரநகை வியாபாரி நீரவ் மோடி ரூ.11 ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதால் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் சிக்கலில் உள்ளது.
இந்தியாவில் கடன் வாங்கினால் வட்டி அதிகம் என்பதால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உத்தரவாத கடிதம் மட்டும் வாங்கி அவற்றின் மூலம் வெளிநாட்டு வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளார் நீரவ் மோடி. இந்த உத்தரவாத கடிதம் கொடுக்க மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பணக்கவனிப்பும், பாலிவுட் நடிகைகளின் கவனிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது.
கேட்கும்போதெல்லாம் கடன் உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளதால் தற்போது தலைமறைவாகியிருக்கும் நீரவ் மோடி பெற்ற கடன் அனைத்தையும் பஞ்சாப் நேஷனல் வங்கியே கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடிகைகளின் உல்லாச கவனிப்பின் மூலம் வீழ்ந்த அதிகாரிகளிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :