வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:55 IST)

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்: முதலமைச்சர் அறிவிப்பு

Punjab
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தீபாவளி பரிசாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக தெரிவித்தார் 
 
அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் லட்சக் கணக்கான ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம்  கொண்டுவரப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்த நிலையில் அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran