திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 மே 2021 (08:33 IST)

தடுப்பூசி இலக்கை அடையும் கிராமங்களுக்கு 10 லட்சம் சிறப்பு நிதி… முதல்வர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி இலக்கை முழுமையாக அடையும் கிராமங்களுக்கு 10 லட்ச ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் இல்லாமை, படுக்கைகள் இல்லாமை மற்றும் கொரோனாவால் இறந்தவர்களை முறையாக நல்லடக்கம் செய்ய முடியாமல் ஆறுகளில் தூக்கி வீசுதல் போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் கொரோனாவை முழுமையாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இப்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டும் கிராமங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.