1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (12:55 IST)

கலகலக்கும் கறி சோறு போட்டி; ஜெயிச்சா ராயல் என்பீல்டு! – புனேவில் குவியும் கூட்டம்!

புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் அசைவ உணவு போட்டியில் வென்றால் ராயல் என்பீல்டு பரிசு என அறிவித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் அவ்வபோது நடைபெறும் சில விழாக்கள் போட்டிகள் பலரது கவனத்தை சட்டென திரும்பி பார்க்க வைக்கும். இதுநாள் வரை அதுபோல அதிக மது அருந்தும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடந்துள்ள நிலையில், வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சாப்பிடும் போட்டி போன்ற நூதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது புனே உணவகம் ஒன்று.

அதன்படி அந்த உணவகத்தில் வைக்கப்படும் விதவிதமான 4 கிலோ அளவுள்ள அசைவ உணவுகளை ஒரு முறையாக சாப்பிட்டு முடிக்க வேண்டும். அப்படி சாப்பிடுபவர்களுக்கு ராயல் என்பீல்டு பைக் ஒன்று பரிசாக அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. உண்மையான உணவு பிரியரால் மட்டுமே இதில் ஜெயிக்க முடியும் என்ற ரீதியில் பலர் அந்த உணவகம் நோக்கி படையெடுத்து வருகிறார்களாம்.