1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:32 IST)

இரண்டு மாநிலங்களில் சோனு சூட் ஆம்புலன்ஸ் சர்வீஸ்! – தொடங்கி வைத்த சோனுசூட்

சமீப காலத்தில் பொதுசேவையால் புகழ்பெற்ற நடிகர் சோனுசூட் பெயரில் இரண்டு மாநிலங்களில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ தொடங்கியது முதல் இதுநாள் வரை நடிகர் சோனுசூட் மக்களுக்காக ஏராளமான பொதுசேவைகளை செய்து வந்துள்ளார். அவரது இந்த சேவை மனப்பான்மையை பாராட்டி பல மாநிலங்கள் அவருக்கு விருது அளித்து கௌரவித்துள்ள நிலையில் தெலுங்கானாவில் அவருக்காக கோவிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சோனுசூட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் என்ற புதிய சேவையை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சோனுசூட் தொடங்கி வைத்துள்ளார். மருத்துவத்திற்கு பெரிய அளவில் செலவு செய்ய முடியாத ஏழை மக்களுக்காக இந்த இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.