உங்க ரூல்ஸ் எங்களுக்கு ஒத்துவராதுப்பா! – வாட்ஸ் ஆப்புக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு!
Prasanth Karthick|
Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:33 IST)
வாட்ஸ் ஆப்பின் புதிய கட்டுப்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் புதிய விதிகளை திரும்ப பெற மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் சமீபத்தில் புதிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர் கொள்கைகளை வெளியிட்டது. இதன்மூலம் தனிநபர் தகவல்களை வாட்ஸப் சேமிக்கப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பலர் வாட்ஸப்பை விடுத்து டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் புதிய கொள்கைகள் குறித்து வாட்ஸப் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற குழு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சர்ச்சைக்கு இடம் கொடுக்கும் புதிய தனியுரிமை பாதுகாப்பு கொள்கைகள் வாட்ஸாப் திரும்ப பெற வேண்டுமென வாட்ஸ் ஆப்பின் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசிடமிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பின் இந்த புதிய பாதுகாப்பு கொள்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.