பப்ஜியை தடை பண்ணுனா என்ன? வேற கேம் மூலமா வரலாம் – இந்தியாவில் நுழையும் பப்ஜி நிறுவனம்!
இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் கேம் மார்க்கெட்டில் திரும்ப நுழைய புதிய கேமை பப்ஜி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களால் அதிகம் விளையாடப்படும் கேமாக இருந்த பப்ஜி இரண்டு மாதங்கள் முன்னதாக தடை செய்யப்பட்டது. எனினும் பைரேட்டட் தளங்கள் மூலமாக சிலர் பப்ஜியை தரவிறக்கி விளையாடி வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக எந்த வகையிலும் பப்ஜி விளையாட இயலாத தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய கேம் மார்க்கெட்டில் திரும்ப நுழையும் முயற்சியில் இந்தியாவிற்கென பிரத்யேகமான விளையாட்டை பப்ஜி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக சீன நிறுவனங்கள் பப்ஜி நிறுவனத்துடன் பெரும்பான்மை பங்கில் இருப்பதாக கூறப்பட்டதால் சீன செயலிகளுடன் பப்ஜியும் தடை செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் இதற்கென நிறுவனத்தை அமைக்கவும் பப்ஜி நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.