தொடர்புடைய செய்திகள்
- ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!
- இந்திய விண்வெளி நிலையம்: இஸ்ரோ விண்வெளியில் ஆய்வகம் அமைப்பது எதற்காக? அதில் என்ன செய்யும்?
- வெள்ளியை நோக்கி ‘சுக்ரயான்-1’.. இஸ்ரோவின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்! - எப்போது தெரியுமா?
- ராக்கெட் தொழில்நுட்பத்தை அடித்தட்டு மக்களுக்காக பயன்படுத்த நினைத்த மாபெரும் விஞ்ஞானி
- 2024ஆம் ஆண்டுக்குள் ககன்யான் விண்கலத்தை ஏவ முயற்சி! இஸ்ரோ தலைவர்
இன்று ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
இன்று மாலை 4:08 மணிக்கு ஏவப்பட இருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் "ப்ரோமோ 3" என்ற செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4:08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட இருந்ததாகவும், இதற்கான கவுண்டவுன் தொடங்கியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்விசி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"ப்ரோமோ 3" செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கோளாறு தற்போது சரி செய்யப்படுவதாகவும், நாளை மாலை 4:12 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
