வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..!
இன்று பிஎஸ்எல்வி சி 58 என்ற ராக்கெட் ஏவப்படும் என்றும் ஏற்கனவே கவுண்டவுன் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது
இஸ்ரோவின் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைக்கோள்களுடன் சற்று முன்னர் பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆய்வு செய்ய எக்ஸ்போசாட் செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த செயற்கைக்கோளை பூமியில் இருந்து சுமார் 650 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் திருவனந்தபுரம் கல்லூரி மாணவ மாணவிகள் ரெசார்ட் செயற்கைக்கோளும் ஏவப்பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டில் முதல் நாளிலேயே இஸ்ரோவால் விண்ணில் ஏவிய ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது என்பதும் பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டில் இது 60வது விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva