ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (10:01 IST)

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு புதிய ஹோம் கிரவுண்ட்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்ததில் இருந்து விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆனால் பலமுறை சிறப்பாக விளையாடி சில முறை இறுதிப் போட்டிக்கு கூட தேர்வாகியுள்ளது.

இதையடுத்து அந்த அணி நிர்வாகம் பல முறை கேப்டன்களையும் வீரர்களை மாற்றிப் பார்த்தது. ஆனால் இதுவரை அந்த அணியின் கோப்பைக் கனவு பலிக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் பஞ்சாப் அணியின் ஹோம் கிரவுண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் 230 கோடி ரூபாய் செலவில் புதிய ஸ்டேடியம் திறக்கப்பட்டுள்ளது. மொஹாலி மைதானத்தை விட இந்த மைதானத்தில் அதிக ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த மைதானத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.