முழுக்கதையும் பார்த்தால்தான் புரியும்… சலார் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிரசாந்த் நீல் பதில்!
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள இயக்குனர் பிரசாந்த் நீல் “படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தில் சில விஷயங்களை பின்தொடர்வது கஷ்டமாக இருப்பதாக சொல்கின்றனர். 6 மணி நேரக் கதையில் இப்போது பாதியைதான் ரசிகர்கள் பார்த்துள்ளார்கள். முழுக் கதையையும் பார்க்கும்போது மேலும் விஷயங்கள் புரியவரும். நான் தேவையற்ற எந்த கதாபாத்திரங்களையும் சேர்க்க மாட்டேன். கதைக்கு எது தேவையோ அதை செய்துள்ளேன். அது ரசிகர்களுக்கு புரியுமா இல்லையா என்பதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. இந்த விமர்சனங்களால் நான் இரண்டாம் பாகத்தில் எதையும் மாற்றப்போவதில்லை” எனக் கூறியுள்ளார்.