1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 ஜூன் 2022 (18:56 IST)

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த PSLV - C53 ராக்கெட்

pslv rocket
மூன்று செயற்கைக்கோள்களை தாங்கியபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி 53 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது 
 
பிஎஸ்எல்வி சி 53 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையை வெற்றிகரமாக அடைந்து விட்டது என்றும் மூன்றாம் கட்ட நிலையையும் கடந்து விட்டது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
 
மேலும் இதில் பொருத்தப்பட்டிருந்த 3 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர் 
 
சிங்கப்பூருக்கு சொந்தமான செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக் கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.