செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (11:08 IST)

பஞ்சாங்கம் பேசுனதுக்கு எனக்கு இது தேவைதான்..! – நடிகர் மாதவன்!

ராக்கெட்டை ஏவ இஸ்ரோ பஞ்சாங்கத்தை பயன்படுத்தியதாக நடிகர் மாதவன் பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அவர் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாதவன் இயக்கி, நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் “ராக்கெட்ரி; நம்பிராஜன் எஃபெக்ட்”. இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பிராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன், இஸ்ரோ 2014ல் அனுப்பிய மங்கல்யான் விண்கலம் பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்து விண்ணில் ஏவப்பட்டதாக பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலரும் மாதவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் மாதவன் “செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை அடைவதற்கான ராக்கெட்டை ஏவ இஸ்ரோவுக்கு பஞ்சாங்கம் தேவைப்பட்டது என்று பேசிய எனக்கு இவையெல்லாம் தேவைதான். அறியாமல் அவ்வாறு பேசிவிட்டேன். ஆனால் 2 எஞ்சின்களை மட்டுமே வைத்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பியதை இவையெல்லாம் மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்” என தெரிவித்துள்ளார்.