செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (14:23 IST)

மம்தா மார்பிங் புகைப்பட சர்ச்சை – மன்னிப்புக் கேட்க கோரிய உச்சநீதிமன்றம் !

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை இழிவாக மார்பிங் செய்த பிரியங்கா சர்மாவை மன்னிப்புக்கேட்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா வித்யாசமான ஆடை ஒன்றை அணிந்து வந்தார். அது கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் உருவாக்கியது. பலருடையப் புகைப்படங்களையும் அதுபோல மாற்றி சமூக வலைதளங்களில் உலாவ விட்டனர்.

அதுபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை இந்த புகைப்படத்தில் மார்ஃப் செய்து பாஜக தொண்டர் பிரியங்கா சர்மா என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பினார். இதையடுத்து திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைத்தனர். இது திருணாமூல் காங்கிரஸ் கட்சி மீதும் மம்தா மீதும் விமர்சனங்களை உருவாக்கியது. மேற்கு வங்கத்தில் இன்றுவரை நீதிமன்ற வேலை நிறுத்தம் என்பதால் வழக்குக்காக உச்சநீதி மனறத்தை நாடினார் பிரியங்கா.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ’ பிரியங்கா அவரது அவதூறான செயல்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் குற்றவியல் சட்டத்தைக் கணக்கில் எடுக்க முடியாது. மற்றவருடைய உரிமைகளை மீறாத வகையில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த வேண்டும். ’ எனத் தெரிவித்தனர்.