செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (14:33 IST)

மம்தா பானர்ஜியின் மார்பிங் புகைப்படம் – சிறைக்கு சென்ற பாஜக தொண்டர் !

மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தைப் போல மார்ஃபிங் செய்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா வித்யாசமான ஆடை ஒன்றை அணிந்து வந்தார். அது கடுமையான விமர்சனங்களையும் கேலிகளையும் உருவாக்கியது. பலருடையப் புகைப்படங்களையும் அதுபோல மாற்றி சமூக வலைதளங்களில் உலாவ விட்டனர்.

அதுபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை இந்த புகைப்படத்தில் மார்ஃப் செய்து பாஜக தொண்டர் பிரியங்கா சர்மா என்பவர் சமூக வலைதளங்களில் பரப்பினார். இதையடுத்து திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைத்தனர். இது திருணாமூல் காங்கிரஸ் கட்சி மீதும் மம்தா மீதும் விமர்சனங்களை உருவாக்கியது.