புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (20:08 IST)

’அடுத்த பிரதமரை’ தீர்மானிக்கும் ’கிங் மேக்கர் ’ யார் ? : உச்சகட்ட அரசியல் பரபரப்பு

உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் நம் தேசத்தில் நடைபெற்று வருகிறது. ஆறு  கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளன. இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை  ஆழ்வார் பேட்டையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில்  இன்று, தெலங்கானா முதல்வர் மற்றும் தெலங்கானா ராஷ்டிர்டிய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகர ராவ் சந்தித்து பேசினார்.
 
இந்நிலையி காலை முதலே அரசியல் விமர்சர்கள் ஊடகங்கள் பல்வேறு வியூகங்களை எழுப்பிவந்தனர். 
 
அதில் தேர்தல் முடிவுக்குப் பின்னர்   தேசிய அரசியலில் மூன்றாவது அணி அமைப்பதற்காகத்தான் சந்திரசேகர ராவ் பல மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து இதுகுறித்து பேசிவருதாகத தகவல்கள் வெளியாகின.
 
இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்தில் சந்தித்த சந்திரசேகர ராவ்  சுமார் ஒரு மணிநேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் முக ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்  சந்திரசேகர ராவை சந்தித்தது மரியாதை நிமித்தமானது  என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னர் தேசிய அளவில் காங்கிரஸ் - பாஜக வுக்கு மாற்றாக மூன்றாவது அணிஅமைப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஸ்டாலினை சந்தித்துப் பேசியது அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.
 
இந்நிலையில் ஆந்திரா - தெலங்கான மாநில முதல்வர்களான சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் மூன்றாவது அணி அமைத்து தன் மாநிலத்தை முதன்மைப்படுத்த  தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

ஒருவேளை இவ்விருவருமே பிரதமர் பதவிக்குக் கண் வைத்துள்ளனரோ என்னவோ? என்று கேள்விகள் எழுந்த நிலையில் நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. ஒருவேளை இவ்விருவரும் அடுத்த பிரதமரை தீர்மானிக்க இதில் கிங் மேக்கராக களம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
 
இது இப்படியிருக்க  ஸ்டாலின் ஒரு மேடையில் காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.ஆனால் இதனை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
 
இந்த அரசியல் பரபரப்பில் இரு தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவை ஒரமாக ஒதுக்கிவருகிற மேற்குவங்க முதல்வர் மற்றும் திரிணாமுள் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜியும் பிரதமர் கனவில் இருப்பதாகத தகவல்கள் வெளியாகின்றன.
 
அடுத்த வரும் 23 ஆம் தேதி அன்றுதான்   இந்தியாவின்  அடுத்த பிரதமரை யார் தீர்மானிப்பார்கள் என்று தெரியும். அதுவரை எதிர்பார்ப்புடன் அரசியல் நிலவரங்களைப் பார்த்து வருவோம்.