வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 மே 2020 (11:50 IST)

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1000 பஸ்: பிரியங்கா காந்திக்கு ஒப்புதல் தருவாரா யோகி?

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி கடந்த சில மாதங்களாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. விரைவில் வரவிருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பல மாநிலங்களில் தங்கியிருக்கும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துவர பிரியங்கா காந்தி அதிரடி ஏற்பாடுகளை செய்திருக்கிறார். இதற்காக அவர் ஆயிரம் பஸ்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நாடு முழுவதும் உள்ள உத்தரப்பிரதேச தொழிலாளர்களை சொந்தமான மாநிலத்திற்கு அழைத்து வர அந்த பேருந்துகளை அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து இந்த பேருந்துகளை இயக்க பிரியங்கா காந்தி சார்பில் உத்தரப் பிரதேச அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிசீலித்து ஆயிரம் பஸ்களை இயக்க அனுமதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
பிரியங்கா காந்தியின் இந்த சிறப்பான திட்டம் வெற்றி பெற்றால் காங்கிரஸ் கட்சிக்கு புகழ்பெற்று விடுமோ என்ற அரசியலும் இதில் நுழைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் வெளி மாநிலத்தில் இருக்கும் உத்தரபிரதேச தொழிலாளர்களுக்காக பிரியங்கா காந்தி எடுத்துள்ள இந்த திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் கொடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்