விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி புகைப்படம், பகவத் கீதை!

Prasanth Karthick| Last Modified திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:55 IST)
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனம் தயாரிக்கும் செயற்கை கோள் மூலமாக பிரதமர் மோடியின் புகைப்படம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோ பல மைல்களை எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அதன்படி இம்மாத இறுதிக்குள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சதீஷ் தவான் என்னும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோளில் பிரதமர் மோடியின் புகைப்படம், பகவத்கீதை மற்றும் 25,000 இந்தியர்களின் பெயரையும் விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :