திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 18 மே 2019 (12:44 IST)

பிரதமர் மோடி சென்ற ஊரில் நிலநடுக்கம் - என்ன ஆச்சு?

பிரதமர் மோடி ஆன்மீக பயணமாக சென்ற உத்தரகாண்ட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுவரை முழு பிரச்சார பயணத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆன்மீக பயணமாக உத்தரகாண்ட் பகுதியிலுள்ள கேதர்நாத் ஆலயத்திற்கும், தேர்தல் நாளான நாளை பத்ரிநாத் ஆலயத்திற்கும் செல்கிறார். தற்போது உத்தரகண்ட் சென்று கேதர்நாத் ஆலயத்தில்  வழிபட்டுவிட்டு பிரதமர் சென்றுவிட்டார். 
 
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. பிரதமர் வரும் அன்றே இவ்வாறு நிலநடுக்கமும்  வந்ததுள்ளது. இவை உத்தரகாண்ட் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.