வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (11:49 IST)

தும்குருவில் நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்வுள்ளார் பிரதமர் மோடி!

PM Modi sad
கர்நாடக மாநிலம் தும்குருவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி  நாளை திறந்து வைக்கிறார்.
 

கர்நாடக மாநிலத்தில் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நாளை கர்நாடகா செல்கிறார். எனவே,  காலையில், பெங்களூர் சர்வதேச கண்காட்சி மையத்தில் இந்திய எரிசக்தி வாரா விழாவை தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து  தும்குரு மாவட்டம், பிதரஹள்ளி கிராமத்தில், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர்  உற்பத்தி தொழிற்சாலையை  பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இந்த தொழிற்சாலையில் முதலாண்டில் 30 ஹெலிகாப்டர்களும், அடுத்தாண்டும் இது இன்னும் அதிகரிக்கப்படவுள்ளது.