ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (12:57 IST)

Navarasa - 9 நடிகர்கள் & 9 இயக்குனர்களின் ஆந்தாலஜி வெப்தொடர் டீசர் இதோ!!

9 நடிகர்கள் மற்றும் 9 இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. 

 
9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் இணைந்து உருவாக்கியுள்ள நவரசா என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம்  6 ஆம் தேதி வெளியாக இருப்பதாக நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனோடு நவரசா டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யா கௌதம் மேனன் படத்தின் தலைப்பு கிடார் கம்பி மேலே நின்று என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது மேலும் 3 படங்களின் தலைப்பு வெளியாகியுள்ளது. தைரியம் என்ற ரசத்தில் உருவாகியுள்ள துணிந்த பின் படத்தில் அதர்வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
அதே போல பயம் என்ற ரசத்தில் உருவாகும் இன்மை என்ற படத்தில் சித்தார்த் மற்றும் பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். கருணை என்ற ரசத்தில் உருவாகும் எதிரி என்ற படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் என 9 இயக்குநர்கள் 9 கதைகளை இயக்கியுள்ளனர்.  சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
ஒவ்வொரு கதைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஜிப்ரான், அருள்தேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹன்னான் உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளனர். இதோ இதன் டீசர்...