1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:14 IST)

விமானத்திற்கு வழி விடாமல் நின்ற கார்! – டெல்லியில் பரபரப்பு!

Indigo
டெல்லி விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட இருந்த நிலையில் கார் ஒன்று வழியை மறித்து நின்றதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த சில காலமாக இண்டிகோ நிறுவன விமானங்கள் தொடர் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த மாதம் அரபு அமீரகத்திலிருந்து இந்தியா வந்த விமானம் கோளாறு காரணமாக கராச்சியில் இறங்கியது. அதுபோல அசாம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியதால் ரத்து செய்யப்பட்டது.

தற்போது டெல்லியில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமானம் ஒன்று இன்று பாட்னா செல்ல இருந்தது.

இந்நிலையில் விமானத்தின் முன்பகுதியில் மாருதி கார் ஒன்று பழுதடைந்து நின்றதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான அதிகாரிகளும் விமானத்தை நகர்த்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.