1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (21:11 IST)

பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து!

modi
பிரதமர் மோடியின் சகோதரர் மோடி பிரகலாத் மோடியின் சகோதரர் பிரகலாத் தன் குடும்பத்தினருடன் காரில் இன்று சென்று கொண்டிருந்தார்.

கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் புந்திபுராவில் சென்றபோது பிரகலாதி மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் திடீரென்று விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பிரகலாத் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பிரகலாத் மோடியின் பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited By Sinoj