செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2022 (19:00 IST)

பிரதமர் மோடியின் ஆட்சியின் 9 மாநில அரசுகள் கவிழ்ப்பு- முதல்வரின் மகள் குற்றச்சாட்டு

முதலமைச்சரின் மகளே இப்படி செய்யலாமா?
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள 8 ஆண்டுகளில் 9 மாநில ஆட்சியைக் கவிழ்த்துள்ளதாக தெலுங்கானா முதல்வரின் மகளும் எம்பியுமான கவிதா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநில முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர் அக்கட்சியின் எம்பியாக உள்ளார்.

இந்த நிலையில்,டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், எம்பி கவிதாவின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்து, நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததது.


இதுகுறறித்து நேற்று தெலுங்கானாவில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி கவிதா,   பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் 9 மாநிலங்களில் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற அரசுகளை கவித்துள்ளது என்றும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க  பாஜக சூழ்ச்சி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Edited by Sinoj