செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:44 IST)

கிறிஸ்துமஸில் நல்லிணக்கம், மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்! – பிரதமர் மோடி வாழ்த்து!

Pm Modi
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பலர் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளதுடன், புத்தாடை அணிந்து சர்ச் சென்று வழிபாடு செய்து கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ள பிரதமர் மோடி “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், சமுதாயத்திற்கு சேவைசெய்வதில் வலியுறுத்தப்பட்டதையும் நினைவு கூர்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவது உள்ள மக்களுக்கு போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K