வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:03 IST)

அயோத்தியில் ராமர் கோவில், அபுதாபியில் இந்து கோவில்.. திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

modi
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக ஐக்கிய அமீரகம் செல்கிறார் என்றும், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து  வைக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் அடுத்ததாக அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்        

கடந்த 2015ம் ஆண்டு சுவாமி நாராயணன் கோயிலை கட்ட அபுதாபியில் நிலம்         ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது இந்த கோயில் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோயில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பிரதமர்  இன்று ஐக்கிய அமீரகம் பயணம் செல்கிறார்.

Edited by Siva