வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (18:08 IST)

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது.! பிரதமர் மோடிக்கு நன்றி

samithan modi
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா ஒரு சிறந்த அங்கீகாரம் என அவரது ஆராய்ச்சி நிறுவனம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளது
 
ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங்,  நரசிம்ம ராவ்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கடந்தாண்டு காலமான நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இது குறித்து அவரது ஆராய்ச்சி நிறுவனம் எக்ஸ் வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “மிக பொருத்தமுடைய அங்கீகாரமாக எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது அறிவிக்கப்பட்டதுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. நமக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வறியா உழைப்பை அளித்தவருக்கான சிறந்த அங்கீகாரம் இது எனத் தெரிவித்துள்ளது.