திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜனவரி 2024 (17:39 IST)

4 மணி நேரம் சிக்கிக்கொண்ட குடியரசுத் தலைவர்.! காரணம் என்ன?..!!

president
மேகாலயாவில் மோசமான வானிலை காரணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்ற ஹெலிகாப்டர் 4 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக மேகாலயா சென்றுள்ளார். ஷில்லாங்கில் இருந்து அசாமில் உள்ள திபுவுக்கு காலை 10 மணிக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தார். 
 
ஆனால், மோசமான வானிலை காரணமாக சரியான நேரத்தில் விமானம் புறப்பட முடியாமல் 4 மணி நேரம் தாமதமாகி பிற்பகல் 2.35-க்கு புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
திபுவில் கர்பி ஆங்லாங் நிர்வாகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முர்மு கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.