செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (10:23 IST)

குடியரசுத் தலைவா் தோ்தல்: பிரத்யேக பேனா பயன்படுத்த உத்தரவு

pen
குடியரசுத் தலைவா் தோ்தல்: பிரத்யேக பேனா பயன்படுத்த உத்தரவு
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கு பிரத்யேக பேனா அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
குடியரசுத் தேர்தலில் வாக்களிக்கும் எம்எல்ஏக்களுக்கு பிரத்யேக பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் நீலநிற மை மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது 
வாக்குச்சீட்டில் வேறு எந்த பேனாவையும் பயன்படுத்தக்கூடாது என்றும் வேறு எந்த பேனா பயன்படுத்தி இருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த வகை பேனாக்கள் குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் சட்ட மேலவை தேர்தலில் மட்டும் பயன்படும் என்றும் தேர்தல் கமிஷன்  தெரிவித்துள்ளது 
 
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது