குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இவரா?
குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு எதிர்க் கட்சிகள் தயாராகி வருகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகளின் ஆதரவு இருப்பதால் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது
இருப்பினும் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சரத்பவார் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தான் போட்டியிடுவதாக சரத்குமார் கூறியதாகவும் இல்லை என்றால் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.