1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (19:57 IST)

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா: குடியரசு தலைவர் ஒப்புதல்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவ்ந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மத்தியில் ஆளும் பாஜக ரத்து செய்தது. மேலும் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பை கண்டித்து மாநிலங்களவையில் எதிர் கட்சிகளைச் சேர்ந்த பலரும் கண்டித்து வந்தனர். இது ஒரு ஜனநாயக படுகொலை என பலரும் பல விமர்சனங்களை முன் வைத்தனர். இந்நிலையில் தற்போது காஷ்மீரின் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒப்புதல் அளித்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.