வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (22:56 IST)

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்கும் தேதி அறிவிப்பு

revandh -ragul gandhi
தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. எனவே ஆளுங்கட்சியான முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன.

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்த இத்தேர்தலில் ஆளுங்கட்சி 2 ஆம் இடம் பெற்றது.

தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி  119 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில், காங்கிரஸ் 64 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாரதிய ராஷ்டிரிய சமிதி  39 இடங்களிலும்,  பாஜக 8 இடங்களிலும் வென்றன.

இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி தெலுங்கானா மாநில முதல்வராக  ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார். காங்கிரஸ் எம்.எக்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ரேவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.