1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (16:43 IST)

மருத்துவமனையில் இருந்து முன்னாள் முதல்வர் டிஸ்சார்ஜ்

chandrasekhar rao
தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ்.  சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி முதலமைச்சர் பதவியேற்றார்.  
 
இந்த நிலையில்  சமீபத்தில் அதிகாலை 2:00 மணி அளவில் திடீரென முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர்  ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 
 
இதையடுத்து சந்திரசேகர ராவுக்கு இடுப்பு எலும்பு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிசைக்குப் பிறகு சந்திரசேகர ராவ் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் 2 அல்லது 3   நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை கூறியது.
 
இந்த நிலையில்,  முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அவர் நந்தி நகரில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வார் என தகவல் வெளியாகிறது.
 
மேலும், அவர் இன்னும் ஆறு முதல் 8 வாரங்களில் பூரண குணமடைவார் என கூறப்படுகிறது.