திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (20:13 IST)

பிரியங்கா காந்தியை உபி முதல்வராக்குவாரா பிரசாந்த் கிஷோர்!

தேர்தல் வியூக மன்னன் என்று போற்றப்படும் பிரசாந்த் கிஷோர் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை முதல்வராக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இன்று மாலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தர். மூவரும் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரியங்கா காந்தியை முதல்வராக்கியே தீருவேன் என்று பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது 
 
ஏற்கனவே தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியவர்களை சமீபத்தில் முதல்வர் ஆக்கிய நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியையும் முதல்வர் ஆக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்