1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (07:29 IST)

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி: பிரசாந்த் கிஷோர் திட்டம்!

ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் குறிப்பாக குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி அமர்வதற்கு ஆதரவாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அவர் தற்போது வேலை செய்து வருகிறார்
 
குறிப்பாக தமிழகத்தில் திமுகவுக்கும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் அவர் தேர்தல் பணிகளை செய்ததை அடுத்து இந்த இரு கட்சிகளும் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்ததாக பாஜகவை மத்திய அரசில் இருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக அவர் தேசிய அளவில் தலைவர்களை சந்தித்து பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார்.
 
முதலில் அவரை சந்தித்த அவர் விரைவில் சந்திரசேகர் ராவ் அவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மம்தா பானர்ஜி மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டார் என்பதும் அடுத்த கட்டமாக அவர் பாஜகவுக்கு எதிரான அனைத்து மாநில முதல்வர்களையும் தலைவர்களையும் சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது