தமிழில் உருவாகிறதா பிரசாந்த் கிஷோரின் பயோபிக்… தயாரிக்க போவது உதயநிதிதானாம்!
அரசியல் உத்தி வகுப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் வெப் சீரிஸாக உருவாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் கவனிக்கப்பட்ட முகமாக மாறியவர் ஐபாக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர். அதன் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் இவரின் பங்களிப்பு இருந்துள்ளது. பெரும்பாலும் இவரின் நிறுவனம் வேலை பார்த்த கட்சிகள் வெற்றிவாகை சூடினர்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணிக்கு வேலை செய்தார். இந்நிலயில் நடிகர் உதயநிதியின் தயாரிப்பு நிறுவனம் இப்போது பிரசாந்த் கிஷோரின் பயோபிக்கை வெப் சீரிஸாக எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமும் அவரின் பயோபிக்கை திரைப்படமாக எடுக்க ஆர்வமாக உள்ளது.