1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (11:33 IST)

பிரசாந்த் கிஷோர், சோனியாவுக்கு அளித்த ஐடியாக்கள் என்ன?

பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியுடனான சந்திப்பில் சுட்டிக்காட்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

 
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது தன் செல்வாக்கை பெரிதும் இழந்துள்ளது. தேர்தலுக்கு தேர்தல் தொடர்ந்து தோல்வி முகம் கண்டு வரும் காங்கிரஸ் சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பல இடங்களில் தோல்வியை தழுவியது. தற்போது இந்தியாவில் 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
 
ராகுல்காந்தியும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை காட்டி தலைவர் பதவியிலிருந்து விலகியதிலிருந்து காங்கிரஸ் சரியான திசையின்றி பயணித்து வருகிறது. தற்போது சோனியா காந்தி தற்காலிக தலைவராக இருந்தாலும் கட்சியை மேம்படுத்துவதற்கான பெரிய நடவடிக்கைகள் எதும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
 
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சோனியா காந்தியை சந்தித்து பேசி வரும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளாராம். 
பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு... 
 
# மக்களுக்கு புதிய காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும்.
# காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்தல்.
# உரிமை உணர்வு மற்றும் முகஸ்துதியை அழித்தல், கூட்டணி பிரச்சனையை சரி செய்தல்.
# வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் தலைவர்
# அனைத்து மட்டங்களிலும் தேர்தல் மூலம் நிறுவன அமைப்புகளை மறுசீரமைத்தல்.
# காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உட்பட அனைத்து பதவிகளுக்கும் நிலையான கால, நிலையான பதவிக்காலம்.
# 15,000 அடிமட்டத் தலைவர்களைக் கண்டறிந்து அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துங்கள் மற்றும் இந்தியா முழுவதும் 1 கோடி காங்கிரஸ் தொண்டர்களை களப்பணியில் ஈடுபட செய்தல்.
# 200+ ஒத்த எண்ணம் கொண்ட இன்ஃப்ளூயினர்சகள், ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்குதல்