1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:34 IST)

பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் சோனியா காந்தி ஆலோசனை!

prasanth
அரசியல் கட்சிகளுக்கு தொழில்முறை தேர்தல் ஆலோசகராக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைக்க வேண்டுமென பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை செய்த பிரசாந்த் கிஷோர் தற்போது மீண்டும் பிரசாந்த் சோனியாகாந்தியை சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார்
 
இந்த ஆலோசனையின் போது ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது