1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. End of an Era: Blinkit Officially Scraps 10-Minute Delivery Promise Amid Safety Concerns

மத்திய அரசு எச்சரிக்கை எதிரொலி: 10 நிமிட டெலிவரி நிறுத்தம்..

பிளிங்இட்
ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனமான பிளிங்இட் தனது அடையாளமாக விளங்கிய '10 நிமிட டெலிவரி' என்ற வாக்குறுதியை அதிகாரப்பூர்வமாகத் திரும்ப பெற்றுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மாற்றத்திற்கு பின்னால் விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் பிரதானமாக உள்ளன. மிகக் குறுகிய காலக்கெடுவுக்குள் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்ற அழுத்தத்தால், டெலிவரி ஊழியர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துகளில் சிக்குகின்றனர். இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைவதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுட்டிக்காட்டியிருந்தார். 
 
மேலும், சமீபத்தில் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா ஒருநாள் டெலிவரி ஊழியராக பணியாற்றி, அந்த வேலையில் உள்ள நடைமுறை சிக்கல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
 
பிளிங்இட்டின் இந்த முடிவை தொடர்ந்து, ஸ்விகி, இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜெப்டோ போன்ற மற்ற விரைவு விநியோக நிறுவனங்களும் தங்களது நேர கட்டுப்பாட்டு விதிகளை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
திடீரென டெல்லி வந்த சீன பிரமுகர்கள்.. ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையா?