1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (09:21 IST)

ஒவ்வொரு மக்களும் எனக்கு ரூ.100 கொடுங்கள்: தேர்தல் நன்கொடை கேட்கும் பிரசாந்த் கிஷோர்..!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் எனக்கு 100 ரூபாய் நன்கொடை கொடுங்கள், பீகார் மாநிலத்தில் உள்ள 2 கோடி மக்கள் எனக்கு 100 ரூபாய் கொடுத்தால் 200 கோடி ரூபாய் சேர்ந்து விடும், இந்த தொகை எனது அரசியல் கட்சிக்கு தேவையானதாக இருக்கும், நான் கார்ப்பரேட் மாபியாக்களிடம் பணம் வாங்கி அரசியல் செய்ய விரும்பவில்லை, பொதுமக்களிடம் தான் நன்கொடை கேட்கிறேன்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு பீகாரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது கட்சி நிதியாக நான் கள்ளச்சாராயம், மணல் மாஃபியா மற்றும் கார்ப்பரேட் மாபியாக்களிடம் மக்களிடம் நன்கொடை கேட்க போவதில்லை என்றும் பொதுமக்களிடம் தான் நன்கொடை கேட்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பீகாரில் உள்ள இரண்டு கோடி பேர் தலா நூறு ரூபாய் நன்கொடை கொடுத்தால் போதும் அதனால் எனக்கு 200 கோடி எளிதாக கிடைக்கும், தேர்தல் நேரத்தில் அதை நான் பயன்படுத்திக்கொள்வேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva