1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 12 ஜூன் 2021 (09:16 IST)

டாஸ்மாக் திறப்பு: இது தான் உங்க விடியலா? ஸ்டாலினை நோக்கி பாயும் கேள்வி!

டாஸ்மாக் கடைகளை திறப்பது அவசியமா? என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா இரண்டாம் அலையின் தொற்றுக் குறைந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தொற்றுப் பரவல் அதிகம் உள்ளதாக கூறப்படும் 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் கொரொனா  பாதிப்பு குறைவாக உள்ள சுமார் 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் தொற்று ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில், இறப்பு நூற்றுக்கணக்கில் உள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது அவசியமா? என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு மதுக்கடைகளை திறக்க அப்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அப்போது, மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று கூறி, எதிர் கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டானின், மற்றும் திமுகவினர் அவரவர் வீடுகளுக்கு வெளியில் நின்று கறுப்புக் கொடி பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருகிறது. இது தான் உங்கள் விடியலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.