காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்: என்ன காரணம்?

gayathri
காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்: என்ன காரணம்?
mahendran| Last Modified வெள்ளி, 11 ஜூன் 2021 (21:05 IST)
நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விடுதலை சிறுத்தைகள் தலைவரும் மக்களவை எம்பியுமான திருமாவளவன் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியதாக தெரிகிறது

இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் ஜூலை 12ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :