திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 ஜூன் 2018 (09:48 IST)

தூத்துகுடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்

தூத்துகுடியில் சமீபத்தில் காவல்துறையினர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
 
தங்களது அடிப்படை வாழ்வுரிமைக்காக பேரணி நடத்திய போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். 
 
இந்திய அரசு துப்பாக்கி சூடு விவகாரத்தில் சுதந்திரமான வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
 
ஏற்கனவே இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து தூத்துகுடிக்கு நேரடியாக சென்று விசாரணை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.