1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (09:21 IST)

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் வணிக ரீதியிலான பயணம் !

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக வணிக ரீதியிலான பயணம் தொடங்கியுள்ளது. 

 
அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்பேக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட் நேற்றிரவு கிளம்பியது. இதில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டின் மூலம், சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து மூன்று பணக்காரர்கள் பறந்திருக்கிறார்கள்.
 
அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கன்னோர் , இஸ்ரேல் தொழிலதிபர் எய்டன் ஸ்டிப்பே , கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர் மார்க் பதி ஆகியோர்தான் அந்த செல்வந்தர்கள். மொத்தம் 10 நாள் பயணத்தில், இவர்கள் மூவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் தங்கியிருந்து அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். 
 
இதற்காக ஒவ்வொரு பணக்காரரும் செலவழிக்கும் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 418 கோடியாகும்.