திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2024 (08:49 IST)

மோடி கூடவே இருந்தாலும் இந்த இருவரும் மதச்சார்பற்ற தலைவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

prakashraj
மோடி கூடவே இருந்தாலும் இந்த இருவரும் மதச்சார்பற்ற தலைவர்களாக இருப்பார்கள் என்றும் இனி மேலும் தொடர்ந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் நடிகர் பிரகாஷ் ராத்திரி வைத்துள்ளார்.

பிரதமர் மோடி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இந்த ஆட்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்களாக ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திராவில் பாஜகவின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த பவன் கல்யாண் ஆகிய இருவருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலாற்று வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துக்கள், உங்கள் இருவரையும் தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக தெரியும், நீங்கள் உங்கள் கூட்டாளியான நரேந்திர மோடியை போல் இல்லாமல், மதச்சார்பற்ற தலைவர்களாக தொடர்ந்து இருப்பீர்கள் என்ற நம்புகிறேன்.

ஆந்திர மக்களுக்காக நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் வகுப்பு அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது. எங்களை கைவிட மாட்டீர்கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva