1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:22 IST)

நீட் முதுநிலை தேர்வு தள்ளிவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

நீட் முதுநிலை தேர்வு 8 வாரங்கள் தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
நீட் முதல்நிலை தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த தேர்வை 8 வாரங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை ஒத்தி வைத்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன
 
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது
 
இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது எட்டு வாரத்திற்கு இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.