1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (18:43 IST)

850 விவசாயிகளின் விவசாயக் கடன்களை அடைக்கவிருக்கும் அமிதாப்பச்சன்

உத்திரபிரதேசத்தில் 850 விவசாயிகளின் 5.5 கோடி விவசாயக்கடனை அடைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார்.

வட மாநிலங்களில் மழை பொய்த்துப் போனதால் ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பலர் வங்கிகளில் வாங்கிய விவசாயக்கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 
 
இந்நிலையில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், உத்திரபிரதேசத்தை சார்ந்த  850 விவசாயிகளின் 5.5 கோடி விவசாயக்கடனை அடைக்க முன்வந்துள்ளார். இவர் ஏற்கனவே 350 விவசாயிகளின் கடன்களை அடைத்தது குறிப்பிடத்தக்கது.