1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 4 நவம்பர் 2017 (17:45 IST)

கூட்டு பலாத்காரம் புகார் அளிக்க சென்ற பெண்ணை கேலி செய்த போலீஸார்

நான்கு மர்ம நபர்களால் கூட்டு பலாத்கரம் செய்யப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது போலீஸார் கேலி செய்துள்ளனர்.


 

 
மத்திய பிரதேச பாதுகாப்பு படை வீரரின் 19வயது மகள் யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி வகுப்பு சென்று திரும்பியுள்ளார். அப்போது ஹபீப்கஞ்ச் ரெயில் நிலையத்திற்கு அருகே நான்கு மர்ம நபர்கள் அவரை கொடூரமான முறையில் பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர்.
 
தான் கல்லால் தாக்கபட்டதாகவும், பின்னர் கைகள் கட்டப்பட்டு ரெயில் நிலையம் அருகே இழுத்து செலப்பட்டு 4 மர்ம நபர்களால் 3 மணி நேரம் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். 
 
இதுகுறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு அந்த இளம்பெண் சென்றுள்ளார். அங்கு அவர் சொன்னதை கேட்டு காவல்துறையினர் இது என்ன சினிமா கதை போல் உள்ளது என கேலி செய்துள்ளனர். இதையடுத்து அந்த இளம்பெண் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
இந்த சம்பவம் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கு சென்றுள்ளது. அவர் உடனடியாக இதுகுறித்து விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.