1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (17:50 IST)

பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ; 100 வயது மூதாட்டி பலி

100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் மரணமடைந்த விவகாரம் உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


மீரட் மாவட்டம் ஜானி கிராமத்தில் தனது சகோதரனோடு 100 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இன்று அதிகாலை மது போதையில் அவரின் வீட்டிற்கு சென்று ஒரு வாலிபர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அப்போது, அவர் சத்தம் போடவே, அவரை பலமாக தாக்கியுள்ளான்.
 
 
இதில் சத்தம் கேட்டு மூதாட்டியின் சகோதரனும், அருகில் வசிப்பவர்களும் ஓடி வந்து மதுபோதையில் இருந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
வாலிபர் தாக்கியதில் அந்த மூதாட்டி மரணமடைந்தார். விசாரணையில் அவனது பெயர் அங்கிட் புனியா என்பது தெரியவந்தது. மூதாட்டி மரணமடைந்து விட்டதால், அந்த வாலிபர் மீது கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
இந்த விவகாரம் அந்த கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.