திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:14 IST)

கூட்டு பாலியல் பலாத்காரம் - இளம்பெண் பலி

நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரபிரதேசம் ஷாமிலி மாவட்டத்தில் உள்ள பவுரா எனும் கிராமத்தில் ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அதை எதிர்த்து அந்த பெண் போராடியுள்ளார். மேலும், அவர்களை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
உத்தரபிரேசமாநிலம் மீரட் மாவட்டத்தில் ஜானி என்ற கிராமத்தில் 100 வயது மூதாட்டியை போதை ஆசாமி ஒருவர் பாலியால் பலாத்காரம் செய்ததில் அவர் மரணமடைந்த செய்தி நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
அந்த மாநிலத்தில் தொடர்ச்சியாக பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்து வரும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.